24 
news

மனம் விட்டு உண்மையை பேசிய கணவர்.. திருமணமான 21 நாளில்.. மனைவி எடுத்த விபரீத முடிவு

கணவன் தனது எக்ஸ் காதலி குறித்து மனைவியிடம் மனம் விட்டு உண்மையைச் சொன்னதால், மனமுடைந்து திருமணமான 21 நாளில் மனைவி விபரீத முடிவெடுத்த சம்பவம் குறித்து விவரீக்கிறது இந்த சம்பவம்

Srini Vasan

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாண்டித்துரை. இவருக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமாரின் மகள் பூமிகாவிற்கும் கடந்த 3 ஆம் தேதி தடபுடலாக திருமணம் நடந்து முடிந்தது.

பூமிகா அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். திருமணம் நடந்து முடிந்து 21 நாட்கள் ஆகிய நிலையில் கணவன்- மனைவி இருவரும் மனம் விட்டு பேசியதாக தெரிகிறது.

அப்போது தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை மனைவியிடம் ஓபனாக பேசியுள்ளார் கணவன் சுப்பிரமணியன். அதாவது, கணவன் பாண்டித்துரை திருமணத்திற்கு முன் துபாயில் வேலை பார்த்து வந்த சமயத்தில் மதுபான பாருக்கு சென்றுள்ளார்.

அங்கு நடனம் ஆடிய பெண்ணின் அழகில் மயங்கி பாண்டித்துரை அவரின் தொலைபேசி எண்ணை வாங்கி அவரிடம் பேசி வந்ததாக தெரிகிறது. நாளடைவில் அந்த பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு காதலித்ததாகவும் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாண்டித்துரை அந்த பெண்ணின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்தில் அவர் குறித்து விசாரித்தபோது, ஏற்கனவே அவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகள் இருப்பதை மறைத்து பாண்டித்துரையிடம் பழகியது தெரியவந்து இருக்கு. இதனால் அவருடன் பழகுவதை அவர் நிறுத்தி விட்டதாக மனைவி பூமிகாவிடம் உண்மையை கூறியுள்ளார்.

மேலும், பாண்டித்துரை பூமிகாவிடம் இனிமேல் உனக்கு நான் உண்மையாக இருப்பேன் என மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. கணவன் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்த பூமிகா இதுகுறித்து தாய் வீட்டாரிடம் சொல்லியுள்ளார்.

இதற்கு பெண்ணின் குடும்பத்தினரும் திருமணத்திற்கு முன்பு தானே இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பூமிகாவிற்கு ஆறுதல் கூறியதாக தெரிகிறது. எனினும் மன உளைச்சலில் இருந்து வந்த பூமிகா ஒருகட்டத்தில் உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் திருமணத்திற்கு பின், மனைவிக்கு உண்மை எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று கணவன் நினைத்ததில் கூட தவறில்லை.

கல்லூரி சென்று கொண்டிருந்த பக்குவம் இல்லா பெண்ணை திருமணம் செய்து வைத்தது தான் விபரீதத்திற்கு காரணம் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்து.