36 
news

பட்ஜெட்டே பதறுதே.. சம்பவக்காரனான SK.. சமந்தா, தமன்னா வரிசையில் நயன்.. நான் ரொம்பவும் கவலையில இருக்கேன்

தலைசுற்றவைக்கும் சிவகார்த்திகேயனின் 25வது பட பட்ஜெட்... வெளியான புதிய தகவல்,சமந்தா, தமன்னா, வரிசையில் இணைந்த நயன்தாரா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்,“நான் ரொம்பவும் கவலையில இருக்கேன்”.. எதிர்பாராத அசம்பாவிதம்.. எக்ஸ் பக்கத்தில் அல்லு அர்ஜூன் வேதனை,அடுத்தடுத்து இணையும் முக்கிய பிரபலங்கள்... அதிரடி காட்டும் சூர்யா 45 படக்குழு,முதல் பாகத்தை போல் ரசிகர்களை கவருமா விடுதலை 2.. எதிர்பார்ப்பை கூட்டும் புதிய ப்ரோமோ

Srini Vasan

தலைசுற்றவைக்கும் #SK25 பட பட்ஜெட்...அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துருக்காரு. அதுமட்டுமில்லாம அமரனுக்கு பிறகு இவர் நடிக்கும் படங்கள் மீது ரசிகர்கள் மத்தியில எதிர்பார்ப்பு அதிகரிச்சிருக்கு. அடுத்ததா ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில சிவகார்த்திகேயன் நடித்துவரும் நிலையில், தன்னுடைய 25வது படத்திற்கான அறிவிப்பை அவர் வெளியிட்ருக்காரு. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில, ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறாரு. மேலும் இந்த படத்தில ஜெயம் ரவி மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிக்க கமிட்டாகியிருக்காங்க. சமீபத்தில #SK25 படத்திற்கான பூஜை நடந்து முடிந்த நிலையில, இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியிருக்கு. அதன்படி படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என கூறப்படுது.. மேலும் இது சிவகார்த்திகேயன் நடிச்சதுலயே அதிக செலவில் எடுக்கப்படும் திரைப்படம் என்றும் சொல்லப்படுது. குத்தாட்டம் போட இருக்கும் நயன்தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. திருமணமாகி குழந்தைகளுக்கு தாயான பிறகு முதன்மை கதாபாத்திரம் கொண்ட படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, தென்னிந்திய சினிமா தாண்டி ஹிந்தியிலும் நடிச்சி வந்துட்ருக்காங்க. தற்போது இவரது கைவசம் டெஸ்ட், மண்ணாங் கட்டி, டியர் ஸ்டுடண்ட், டாக்ஸிக், ராக்காயி உள்ளிட்ட அரை டஜன் படங்கள் இருக்கு. சமந்தா, தமன்னா, ஸ்ரீலீலா என முன்னணி நடிகைகள் சிறப்பு பாடலுக்கு நடனமாடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வந்துட்ருக்கோம். இந்த நிலையில நயன்தாராவும் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கு. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகரான பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடிகை நயன்தாரா நடனமாட இருப்பதாகவும், இதன் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கு.சிகிச்சையில் சிறுவன் - அல்லு அர்ஜுன் உருக்கம் புஷ்பா 2 பட சிறப்பு காட்சியின்போது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்குல கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு, ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, சஞ்சல்குடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாரு. மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தன்னாலான உதவிகளை செய்வதாகவும் பேட்டி அளிச்சிருந்தாரு இந்த நிலையில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உயிரிழந்த பெண்ணின் மகனான ஸ்ரீதேஜாவின் உடல்நலம் குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்ருக்காரு. அதில, துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சிறுவன் ஸ்ரீதேஜ் குறித்து தான் ஆழ்ந்த கவலையுடன் இருப்பதாகவும், தனது பிரார்த்தனைகள் அவர்களுடன் இருக்கும்னும், சிறுவன் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், கூடிய சீக்கிரமே சிறுவனின் குடும்பத்தினர சந்திக்க உள்ளதாகவும் பதிவிட்ருக்காரு. சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபலங்கள் கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததா ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில தனது 45 வது படத்தில நடிச்சி வந்துட்ருக்காரு. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில, ’கட்சி சேர’, ’ஆச கூட’ போன்ற ஹிட் ஆல்பங்களை கொடுத்த இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் படத்துக்கு இசையமைக்க இருக்காரு. படத்தின் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக படக்குழு அண்மையில் அப்டேட் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில சூர்யா 45 படத்துல மலையாள நடிகர் இந்திரன்ஸ், நடிகை சுவாசிகா, நட்டி நடராஜ், ஷிவதா, யோகி பாபு, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி உள்ளிட்டோர் இணைந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எக்ஸ் வலைதள பக்கத்தில அடுத்தடுத்து அறிவித்து வருது.. இதையடுத்து படம் மீதான எதிர்பார்ப்பு அடுத்தடுத்த அப்டேட்டுகளை தொடர்ந்து ரசிகர்களிடையே அதிகரித்த வண்ணம் இருக்கு.. விடுதலை 2' புரோமோ வெளியீடு வெற்றிமாறன் இயக்கத்தில், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை பாகம் 1’. சூரியின் புதிய பரிமாணம் மற்றும் விஜய் சேதுபதியின் அதிரடி நடிப்புல வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்ப பெற்றுச்சு. இந்த நிலையில பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானி ஸ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடிப்புல உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கு. முதல் பாகத்த போலவே இரண்டாம் பாகத்துக்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில, இதன் முதல் சிங்கிளான ‘தினம் தினமும்’ பாடல் அண்மையில வெளியாகி ஹிட்டாச்சு. இத தொடர்ந்து இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்ப ரசிகர்களிடையே அதிகரிச்சிருக்கு.. சொர்க்கவாசல் ஓடிடி தேதி அறிவிப்புஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் சொர்க்கவாசல். ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் செல்வராகவன், கருணாஸ், நட்டி, ஆண்டனி தாசன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில நடிச்சிருந்தாங்க. 1999-ல் மத்திய சிறைச்சாலையில நடந்த கதையை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படத்துல முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்துல ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன் நடிச்சிருந்தது ரசிகர்கள் மத்தியில வரவேற்பை பெற்றிருந்தது. விமர்சன ரீதியா சினிமா வட்டாரத்துல சொர்க்கவாசல் நேர்மறையான விமர்சனங்கள பெற்றுச்சுன்னு சொல்லலாம். இந்த நிலையில, சொர்க்கவாசல் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கு. அதன்படி இப்படம் வருகிற 27-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகள்ல வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்குபூஜையுடன் தொடங்கிய சூரியின் மாமன்Zee5 ஓடிடி தளத்துல வெளியாகி சூப்பர் ஹிட் அடிச்ச ‘விலங்கு’ வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் - நடிகர் சூரி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் மாமன். இந்த படத்தை கருடன் படத்தை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிச்சிருக்கு. படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷமி ஒப்பந்தம் செய்யப்பட்ருக்காங்க. கருடன், விடுதலை படங்களை தொடர்ந்து சூரி நாயகனாக நடிக்கும் படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்துட்ருக்கு. இந்த நிலையில படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் படக்குழு தொடங்கியிருக்கு.