இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 236 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்துள்ளது.