16 
news

சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இந்தியர்... இந்திய விமானப்படையைச் சேர்ந்த வீரர் சுபான்ஷு சுக்லா

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட உள்ளார்.

Srini Vasan

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட உள்ளார்.

அமெரிக்காவின் நாசாவுடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்களை அனுப்பும் ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4' என்ற திட்டத்தின் கீழ்,

வரும் மே மாதம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, அவர் பயணம் மேற்கொள்கிறார்.

இந்திய விமானப்படையின் விமானியாக இருக்கும் சுக்லா, விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.