இந்திய விமானப்படையின் துல்லியமான தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் முரிட் விமானப்படை தளத்தில் ஏற்பட்ட சேதம் தொடர்பான புதிய செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.
கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா,ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்கள் குறிவைத்து நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலில் பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது.
இந்நிலையில் தி இன்டெல் லேப்பின் ஆராய்ச்சியாளரான டேமியன் சைமன் பகிர்ந்து கொண்ட படங்கள் இந்திய விமானப்படையின் துல்லியமான தாக்குதலில் ஏற்பட்ட சேதத்தை எடுத்துக் காட்டுகின்றன.