5 
news

கமல்ஹாசன் பட தலைப்புக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு "தக் லைஃப் என்பது பொறுக்கிகள், மூர்க்கர்களை குறிக்கும் சொல்"

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள தக் லைஃப் திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Web Team

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள தக் லைஃப் திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தக் லைஃப் என்பது பொறுக்கிகள், மூர்க்கர்கள் மற்றும் போக்கிரிகளை குறிக்கும் சொல் என கூறியுள்ளார்.

Thugs & Pindaris என்பவர்கள் இந்தியாவை அச்சுறுத்திய வழிப்பறி கொள்ளைக் கூட்டம் என குறிப்பிட்டுள்ள கிருஷ்ணசாமி, Thugs & pindaris ஆகியோருக்கு நல்ல கொள்கையோ, கோட்பாடோ, ஒழுக்கமோ கிடையாது என்பதால், தக் லைஃப் என்ற பெயரை கமல்ஹாசன் மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.