Hockey Youth World Cup 
news

இளையோர் ஹாக்கி “காங்கேயன்“ இலச்சினை வெளியீடு

ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டியின், வெற்றி கோப்பை, “காங்கேயன்“ இலச்சினை அறிமுகம்

Web Team

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டியின், வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தி, போட்டிக்கான “காங்கேயன்“ இலச்சினையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா இணைந்து 14ஆவது ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டியை நடத்துகின்றன. இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நவ.28 முதல் டிச.10ஆம் தேதி வரை சென்னை, மதுரையில் நடைபெறுகிறது.
இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான வெற்றி கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தி, போட்டிக்கான காங்கேயன் இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்.
மேலும், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகைக்கான வங்கி வரைவோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையும் பாருங்கள் - 14ஆவது ஹாக்கி இளையோர் உலக கோப்பை இலச்சினை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் | CM MK Stalin | Cup