Chengalpattu 
news

சாலையோரம் நின்றவர் மீதும், அரசு பேருந்து மீதும் மோதிய லாரி... அரசு பேருந்து நடத்துநர், பயணிகள் என 10 பேர் காயம்

செங்கல்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் கலவை லாரி, சாலையோரம் நின்றிருந்தவர் மீதும் முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீதும் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார்.

Web Team

செங்கல்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் கலவை லாரி, சாலையோரம் நின்றிருந்தவர் மீதும் முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீதும் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார்.

சமையல் வேலை செய்து வந்த புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த குமார், வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக சென்ற சிமெண்ட் கலவை லாரி, கட்டுப்பாட்டை இழந்து குமார் மீதும், முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீதும் மோதியதில் குமார் உடல்நசுங்கி உயிரிழந்தார்.

அரசு பேருந்து நடத்துநர், பயணிகள் என 10 பேர் காயமடைந்தனர்.