8 (2) 
news

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி,, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீரர்

மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்.

Srini Vasan

மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்.

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் யுஷி தனகாவை சந்தித்தார்.

விறுவிறுப்பான ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற நேர்செட்டில் தனகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

32 வயதான ஸ்ரீகாந்த் உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் போட்டி தொடரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறார்.