20 
news

மேலமுத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா... காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலம்

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூர் மேலமுத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

Srini Vasan

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூர் மேலமுத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

காவிரிக்கரையில் இருந்து கரகம் மற்றும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் முதலாவதாக சக்தி கரகம் இறங்கிய பின் பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.