cm, vaigo 
news

ராமதாஸ், வைகோவிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

ராமதாஸ் மற்றும் வைகோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

Web Team

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸ் மற்றும் வைகோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸை சந்தித்து, உடல் நலம் குறித்து அவர் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, காய்ச்சல் காரணமாக கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் சந்தித்து அவர் நலம் விசாரித்தார்.