PMMODI 
news

எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க பல கோடி உதவி.. PM E-Drivve திட்டத்திற்கு ரூ. 10,900 கோடி நிதி ஒதுக்கீடு

எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, பிரதமரின் PM E-Drive திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் செலவிட மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.

Srini Vasan

எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, பிரதமரின் PM E-Drive திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் செலவிட மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.

இதே போன்று PM-eBus சேவைத் திட்டத்திற்கு 3 ஆயிரத்து 435 புள்ளி 33 கோடி ரூபாயும் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. e-two wheelers e-three wheeles, e-ambulances, e-trucks உள்ளிட்டவற்றுக்கு மானியம் வழங்க 3 ஆயிரத்து 679 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 24 புள்ளி 79 கோடி வாகனங்கள் வாங்க மானியம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மத்திய கனரக தொழில் அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு 14 ஆயிரத்திற்கும் அதிகமான இ-பேருந்துகளை வாங்க 4 ஆயிரத்து 391 கோடி ரூபாய் ஒதுக்கவும் மத்திய கேபினட் ஒப்புதல் வழங்கியுள்ளது.