Chess Championship 
news

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர்... 4ஆவது சுற்றில் குகேஷ் அபார வெற்றி

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் நான்காவது சுற்றில் உலக செஸ் சாம்பியன் குகேஷ் அபார வெற்றி பெற்றார்.

Web Team

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் நான்காவது சுற்றில் உலக செஸ் சாம்பியன் குகேஷ் அபார வெற்றி பெற்றார்.

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது.

முதலில் நடைபெற்ற இரு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த குகேஷ், மூன்றாவது சுற்றில் வெற்றி கண்டார்.

இதனைத் தொடர்ந்து நான்காவது சுற்றி அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் பேபியானோ கரவுனாவை வீழ்த்தி வெற்றி கண்டார்.

நான்காவது சுற்றின் இறுதியில், கார்ல்சன் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கரவுனா 7 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும்,

நகமுரா 5.5 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் குகேஷ் 4.5 புள்ளிகள் பெற்று 4 ஆம் இடத்திலும் உள்ளனர்.