80 
news

அரசுப் பள்ளியில் ஆபாச நடனம்.. வெளியான வீடியோ..

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் அரங்கேறிய, பெண்கள் ஆபாச நடனம் தொடர்பான வீடியோ வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியையும் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் அரங்கேறிய, பெண்கள் ஆபாச நடனம் தொடர்பான வீடியோ வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியையும் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சஹர்சா மாவட்டத்தில் உள்ள ஜலாய் காவல் நிலையப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில், மாலை நேரத்தில் பொழுதுபோக்கிற்காக இசைக்குழு மற்றும் சில பார் நடன பெண்கள் வரவழைக்கப்பட்டு கலை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிகழ்வில் நடத்தப்பட்ட ஆபாச நடனம் தொடர்பான வீடியோதான் தற்போது வெளியாகி காண்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது.. காணொளியில் மது அருந்துவிட்டு , போஜ்புரி பாடல்களுக்கு 4 பெண்கள் மற்றும் அவர்களோடு சில ஆண்களும் முகம் சுழிக்கும் வகையில் நடனமாடியுள்ளனர்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் அரசுப் பள்ளியில் இதுபோன்ற விழாவை நடத்த கல்வித்துறை அனுமதித்தது எப்படி என அப்பகுதி மக்கள் தமது கொந்தளிப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஜலாய் காவல் நிலைய அதிகாரி, மம்தா குமாரி கூறுகையில் திருமண ஊர்வல நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, பள்ளி வளாகத்திலேயே நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற எந்த நிகழ்ச்சிக்கும் போலீசார் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவித்த அதிகாரிகள், வீடியோ குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் கல்வி கற்கும் பள்ளிக்கூடங்கள் ஒழுங்கின்மைக்கு உதாரணமாக மாறியிருப்பது, அம்மாநில கல்வித்துறையின் செயல்பாடுகளில் மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பியிருக்கிறது.