3 
news

சுதந்திர தினத்தில், SP பறக்க விட்ட புறா, பறக்காததால் அவமானம்.. சுதந்திரத்தை பறைசாற்றும் வகையில் புறா பறக்க விடும் நிகழ்வு

சத்தீஸ்கர் மாநிலம் முங்கெலி மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், எஸ்.பி., பறக்க விட்ட புறா, பறக்காமல் படுத்துக்கொண்டது. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் தேசிய கொடியேற்றியதும், அமைதி மற்றும் சுதந்திரத்தை பறைசாற்றும் வகையில் புறா பறக்க விடும் நிகழ்வு நடந்தது.

Srini Vasan

சத்தீஸ்கர் மாநிலம் முங்கெலி மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், எஸ்.பி., பறக்க விட்ட புறா, பறக்காமல் படுத்துக்கொண்டது. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் தேசிய கொடியேற்றியதும், அமைதி மற்றும் சுதந்திரத்தை பறைசாற்றும் வகையில் புறா பறக்க விடும் நிகழ்வு நடந்தது. இதில், சிறப்பு விருந்தினரான பா.ஜ., எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான புன்னுலால் மொளே, ஆட்சியர் ராகுல் தேவ் ஆகியோர் பறக்க விட்ட புறாக்கள், ஜம்மென்று பறந்து சென்ற நிலையில் எஸ்.பி. கிரிஜா சங்கர் ஜெய்ஸ்வால் பறக்க விட்ட புறா மட்டும் தரையில் படுத்துக் கொண்டது. இதை பார்த்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சிரித்து விட, அதன் வீடியோ இணையத்திலும் வெளியாகி பெரும் கேலி கிண்டலுக்கு ஆளானது. இதனால் கடுப்பான எஸ்.பி.,கிரிஜா சங்கர் ஜெய்ஸ்வால், 'புறாவுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.