New Project - 2025-05-29T140113 
news

கச்சத்தீவை மீட்பதே மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு.. மீனவர் நலத்துறை சார்பில் நடந்த விழாவில் முதலமைச்சர் உரை

கச்சத்தீவை மீட்பதே தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Srini Vasan

கச்சத்தீவை மீட்பதே தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை திருவொற்றியூரில் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மீனவர்களுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர், மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை காக்கவும் அவர்களின் கண்ணீரை துடைக்கும் அரசாக திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

மீனவர்களுக்காக மேலும் பல திட்டங்களை செயல்படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்த முதலமைச்சர், 426 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.