தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஃபெஞ்சல் புயலின் பாதிப்புகள் குறைவாக இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் தேங்கிய மழைநீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியவர், அம்மா உணவகங்கள் மூலமாக மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.