3 
news

"புதிய கல்விக்கொள்கையை ஏற்குமாறு அழுத்தம்".. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் குற்றச்சாட்டு

புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றம் சாட்டினார்.

Srini Vasan

புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றம் சாட்டினார். தனது தந்தை அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அவரது புகைப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட கூடாது என தெரிவித்தார்.