32 
news

சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு.. மாநகராட்சி ஊழியர்களிடம் கடை உரிமையாளர்கள் வாக்குவாதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

ஒசூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகள் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அகற்றப்படுவதால் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, பேருந்து நிலையம் அருகே சாலையில் ஆக்கிரமிப்பு செய்து மழைநீர் செல்ல இடையூறாக இருப்பதாக கூறி கடந்த 20 நாட்களுக்கு முன்பு வியாபாரிகள் எதிர்ப்புக்கிடையே மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்றி இருந்தநிலையில்

மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வியாபாரிகள் கடைகளை அமைத்துக்கொண்டதால், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மாநகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலைய சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மீண்டும் அகற்றி வருவதால் பரபரப்பு