பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்காக நேற்று பிரசாரத்தை தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தார்.
முதல்வராக இருந்த கெஜ்ரிவால் டெல்லியில் ஊழலை ஒழித்தாரா? என கேள்வி எழுப்பிய ராகுல், மோடியை போலவே கெஜ்ரிவாலும் பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளதாக சாடினார்.