மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கட்சி பாகுபாடு இல்லாமல் பேசக்கூடியவர் என்பதால் அவரை கலைஞரின் நூறு ரூபாய் நாணயம் வெளியிட்டு விழாவிற்கு அழைத்தாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார். சென்னை ராயபுரத்தில், திமுக வர்த்தக அணி சார்பில் மத்திய பட்ஜெட் தொடர்பாக கருத்தரங்கு நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய ஆர். எஸ். பாரதி, தமிழக தலைமை செயலாளர் நியமனத்தில் பாகுபாடின்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாகவும், அதனால் தான் முருகானந்தம் ஐஏஸ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.