4 
news

இந்திய குடியரசுக் கட்சி அத்வாலே பிரிவு பிரமுகர் கைது.. கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர்

சேலத்தில் இந்திய குடியரசுக் கட்சி அத்வாலே பிரிவு பிரமுகரும், ரவுடியுமான பிரம்ம மூர்த்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

சேலத்தில் பிரபல ரவுடியும் இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு மாநிலத்
துணைத் தலைவருமான பிரம்ம மூர்த்தி கைது

ஆதரவாளர்கள் செவ்வாபேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில்
ஈடுபட்டதால் பரபரப்பு

சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த பிரம்ம மூர்த்தி 33 பிரபல ரவுடி இவர் இந்திய
குடியரசு கட்சி அத்வாலே பிரிவு மாநில துணைத்தலைவராக இருந்து வருகிறார் பிரபல
ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி நகை பறிப்பு அடிதடி உள்ளிட்ட
பல்வேறு வழக்குகள் உள்ளது பிரபல ரவுடி பிரம்மமூர்த்தி மீது 54 வழக்குகள்
உள்ளது சென்னை சேலம் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு
வழக்குகள் இவர் மீது உள்ளது இவரை போலீசார் தேடி வந்த நிலையில்
செவ்வாய்பேட்டை போலீசார் சேலம் அரசு மருத்துவமனை அருகே வாகன தனிக்கையில்
ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த பிரம்ம மூர்த்தியை கைது செய்து காவல்
நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்
இதனிடையே கைது செய்யப்பட்டதை அறிந்த பிரம்ம மூர்த்தியின் ஆதரவாளர்கள் ஏராளமான
செவ்வாய்பேட்டை காவல் இணையத்தில் திரண்டு முற்றுகையிட்டனர் அங்கு கோஷங்களை
எழுப்பினர் இதனால் பரபரப்பு நிலவியது கைது செய்யப்பட்ட பிரம்ம மூர்த்தியை உடனே
விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் ஆனால் போலீசார் பிரம்ம மூர்த்தியை
விட வறுத்து முற்றுகை ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பல்வேறு
வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்தனர் இதனை அடுத்து
முற்றுகை ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இவர் கடந்த ஆகஸ்ட் 11ஆம்
தேதி செவ்வாய்பேட்டை பகுதியில் இருதரப்பின் இடையே ஏற்பட்ட போது ஐந்தாவது
குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரம்மமூர்த்தி தலைமறைவான இருந்ததும் இவர் மீது
சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது கொலை முயற்சிக்கு உள்ளிட்ட இரண்டு
பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.