கோவையில் பெய்த கனமழையால் சாய் பாபா காலனி எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில், மழைநீர் புகுந்தது.
மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால், மார்கெட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் அனைத்தும் அதில் நனைந்து விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இடையர்பாளையம், கே.கே.புதூர், வேலாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் வடியும் வடிகால்கள் இந்த மார்க்கெட் வழியாக சாய்பாபா கோயில் சிக்னல் அருகே மேட்டுப்பாளையம் சாலையை கடந்து சங்கனூர் பள்ளத்தை சென்றடைகிறது.
இதனால் மழைக்காலங்கள் தோறும் எம்.ஜி.ஆர் மார்க்கெட் வெள்ளத்தில் மூழ்கி வருவதாக கூறும் வியாபாரிகள், மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.