22 
news

மண்டாடி திரைப்படத்தில் நடிக்க போவது குறித்து சத்யராஜ் பதிவு... படகு போட்டி காட்சியை பார்த்து பிரமித்ததாக நெகிழ்ச்சி

மண்டாடி படத்தில் நடிக்கவும், பட ரிலீஸுக்காகவும், ஒரு சினிமா ரசிகனாக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

மண்டாடி படத்தில் நடிக்கவும், பட ரிலீஸுக்காகவும், ஒரு சினிமா ரசிகனாக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மண்டாடி படம் தொடர்பாக இயக்குனர் மதிமாறன் தன்னை சந்தித்த போது மேக்கிங் வீடியோ ஒன்றை காட்டியதாகவும்,

அந்த வீடியோவில் படகு போட்டி காட்சிகளை பார்த்து பிரமித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் தனது கேரக்டர் சுமாராக இருந்தாலும் நடிக்க வேண்டும் என அப்போதே முடிவு செய்துவிட்டதாகவும் கூறினார்.