அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கான டெண்டரில் குறைந்த விலையை குறிப்பிட்ட ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக ரூ.115 கோடி
மொத்தம் 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 சைக்கிள்கள் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக ஏற்கனவே 277 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சுமார் 115 கோடி ரூபாய் தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மாணவர்களுக்கு நவீன சைக்கிள்களுடன் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் திட்டத்தின் கீழ், சைக்கிள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட விலைகளை ஒப்பிட்டுப் பார்த்ததில், மிகக் குறைந்த விலையை குறிப்பிட்ட ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சைக்கிள் விலை எவ்வளவு?
வரிகள் உட்பட மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சைக்கிளின் விலை 7 ஆயிரத்து 235 ரூபாய் 10 காசுகளாகவும், மாணவிகளுக்கு வழங்கப்படும் ஒரு சைக்கிளின் விலை 7 ஆயிரத்து 476 ரூபாய் 60 காசுகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 சைக்கிள்கள் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.