பாலியல் தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழங்கிய சர்ச்சை உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ,"மகிழ்ச்சிக்கு இடமளிக்கக்கூடாது" இரண்டு நிமிட பாலியல் இன்பத்துக்காக தங்களையே இழப்பதை விட, பருவ வயது பெண்கள் பாலியல் தூண்டுதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமி இளைஞருடன் காதல் தொடர்பில் இருந்ததாக கூறி குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை விடுவித்து உத்தரவிட்டது. இதில் நீதிபதிகளின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில்உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள் பெரும் ஆட்சேபனைக்குரியவை, பொருத்தமற்றவை, தேவையற்றவை என குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், உத்தரவை ரத்து செய்துள்ளது.