பெங்களூருவில் வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சர்ஜாபூரில் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். ஆனால் பைக் முழுவதும் சேதமடைந்த நிலையில், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.