78 
news

சிறுமிக்கு அனுப்பிய ஆபாச வீடியோ.. பிரபல யூடியூபர் மகன் கைது

புதுச்சேரியில் சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பிரபல யூடியூபர் மகனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Srini Vasan

புதுச்சேரியில் சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பிரபல யூடியூபர் மகனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்தார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அறிமுகம் இல்லாத
புதிய நபரிடம் இருந்து மெசோஜ் வந்தது. அதன்பிறகு சிறுமியும் மர்ம நபரும் மாறி மாறி தகவல்களை பரிமாறி வந்தனர். மெசேஜ் மற்றும் வீடியோக்கள் அனுப்புவது மூலமாக நண்பர்களாக பழகி வந்தனர்.

பழகிய 15 நாட்களில், மர்ம நபர் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்பு, பல்வேறு ஆபாச வீடியோக்கள் மற்றும் அவருடைய அந்தரங்க வீடியோக்களை அனுப்பி, சிறுமியையும் நிர்வணமாக வீடியோவில் தோன்றுமாறு மிரட்டி உள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் தாய் சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமியை மிரட்டியது யூடியூபபில் பிரபலமான மதுரையைச் சேர்ந்த சிக்கா, சுமியின் மகனான அஷ்ரப் அலி, என்பது தெரியவந்தது. மேலும், யூடியூப்பர் ரவுடிபேபி என்கிற திருச்சி சூர்யா, இவரது சித்தி என்பது குறிப்பிடதக்கது.

இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் மும்பையில் பதுங்கி இருந்த அஷ்ரப் அலி மீது போக்சோ உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, புதுச்சேரிக்கு கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட அஷ்ரப் அலி, புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். சிறுமியின் தாய் அளித்த புகாரில், ரவுடிபேபி சூர்யா, சிக்கா, சுமி ஆகியோரும் மிரட்டல் விடுத்ததாக
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பிரபல யூடியூபர் மகனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சம்பவம் அப்பகுதிமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.