44 
news

20 கோடி பார்வைகளைக் கடந்த "தாராள பிரபு" படத்தின் பாடல்.. பாக்கு வெத்தலை மாத்தி முடிச்சு’ பாடல் அசத்தல்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான ‘தாராள பிரபு’ படத்தில் இடம்பெற்ற ‘பாக்கு வெத்தலை மாத்தி முடிச்சு’ பாடல், யூடியூபில் 20 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

Srini Vasan

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான ‘தாராள பிரபு’ படத்தில் இடம்பெற்ற ‘பாக்கு வெத்தலை மாத்தி முடிச்சு’ பாடல், யூடியூபில் 20 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

கிருஷ்ணா மாரிமுத்து இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், கதை ரீதியாகவும் பாடல்களாலும் கவனம் பெற்றது.

குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த, 'பாக்கு வெத்தலை மாத்தி முடிச்சு' பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

உலகளவில் கேட்கப்பட்ட இந்தப் பாடல் அதிக முறை ரீல்ஸ் செய்த வீடியோவாகவும் மாறியது.