இந்தியாவிலேயே மகளிர் மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் திகழ்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான மணிமேகலை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பின் தான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியே, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான மகளிரை கவுரவிக்கும் நிகழ்ச்சி என நெகிழ்ச்சி தெரிவித்தார்.