தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சார்மினார் பகுதியிலுள்ள குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஹைதராபாத் சார்மினார் அருகே ஸ்ரீ கிருஷ்ணா பேர்ல்ஸ் குடியிருப்பில் இன்று காலை திடீரென்று தீ பற்றியது.
தீ மளமளவென பரவி குடியிருப்பு முழுவதும் பற்றி எரிந்ததில், அதில் வசித்த அனைவரும் தீயில் சிக்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், துரிதமாக செயல்பட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனை அனுப்பி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.