Thangar resigns 
news

குடியரசு து.தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தங்கர்... மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக விளக்கம்

பரபரப்பான அரசியல் சூழலில் குடியரசுத் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தங்கர் அறிவித்துள்ளார்.

Web Team

பரபரப்பான அரசியல் சூழலில் குடியரசுத் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தங்கர் அறிவித்துள்ளார்.

உடல் நலத்தை முன்னிலைப்படுத்தியும், மருத்துவ காரணங்களுக்காகவும், அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் படி,

தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆனால் கூட்டத் தொடர் தொடங்கிய முதல்நாளிலேயே இந்த முடிவை எடுத்திருப்பதால் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில்,

அடுத்த துணை ஜனாதிபதி யார்? என்ற யூகங்களும் எழத் தொடங்கியுள்ளன.

அதன்படி, சமீப காலமாக பிரதமரை புகழ்ந்து பேசி வரும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் பெயர் முதலில் அடிபடுகிறது.

இதேபோல், கேரளா முன்னாள் ஆளுநர் ஆரிப் முகமது கான், கோவா முன்னாள் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.