16 
news

தங்கைக்கு வாழ்த்து சொன்ன நடிகர்.. அடுத்த ஆண்டு வெளியாகும் பிசாசு 2 .. விடுதலை 2 படக்குழு இளையராஜாவிடம் வாழ்த்து

அடுத்த ஆண்டு ஆரம்பமே திருவிழா என்பதை போல அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக இருக்குது.இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில உருவாகி வரும் இப்படத்தில அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில நடிச்சிருக்காங்க. படத்தின் படபிடிப்பு முழுமையா முடிஞ்சிருச்சினு இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்துடன் எடுத்துக்கிட்ட புகைப்படத்தை வெளியிட்ருந்தது வைரலாகியிருந்தது.

Srini Vasan

விடாமுயற்சி ப்ரீ புக்கிங் வசூல்அடுத்த ஆண்டு ஆரம்பமே திருவிழா என்பதை போல அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக இருக்குது.இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில உருவாகி வரும் இப்படத்தில அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில நடிச்சிருக்காங்க. படத்தின் படபிடிப்பு முழுமையா முடிஞ்சிருச்சினு இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்துடன் எடுத்துக்கிட்ட புகைப்படத்தை வெளியிட்ருந்தது வைரலாகியிருந்தது.இந்த நிலையில விடா முயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் UK மற்றும் அயர்லாந்தில துவங்கியிருப்பதா தகவல் வெளியாகியிருக்கு. அதன்படி,700 டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும், சுமார் 10 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கு. இதன் மூலமா ப்ரீ புக்கிங்கில் விடாமுயற்சி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுது.மாஸ் வசூல் செய்த விடுதலைஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடுதலை 2.இந்த படத்தில மஞ்சு வாரியர், ராஜிவ் மேனன், கவுதம் மேனன், சேத்தன், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில படம் வெளியான நிலையில வசூல் ரீதியாகவும், விமரசன ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கு. இந்த நிலையில விடுதலை 2 திரைப்படம் உலகளவில் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இந்தப்படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கு.'கேம் சேஞ்சர்' படத்திற்கு முதல் விமர்சனம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில நடிச்சிருக்காரு. இந்த படத்தில ஊழல் அமைப்புக்கு எதிரா போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடிச்சிருக்காரு.இந்த படம் பொங்கல் வெளியீடாக அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் டல்லாஸில் கேம் சேஞ்சர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றிச்சி. அப்போது நிகழ்ச்சியில சிறப்பு விருந்தினரா கலந்துகொண்டு பேசிய புஷ்பா இயக்குநர் சுகுமார் படத்த பத்தின விமர்சனத்தை கொடுத்திருக்காரு. அந்த வகையில 'கேம் சேஞ்சர்' படத்தை சிரஞ்சீவி சாருடன் பார்த்ததாகவும், முதல் பாதி அருமை, இடைவேளை பிளாக்பஸ்டர்.என்ன நம்புங்க இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சி ஆச்சரியத்தை கொடுத்திருக்கு என கூறியிருக்காரு.கீர்த்தி சுரேஷ் - ஆண்டனிக்கு நடிகர் வாழ்த்து கீர்த்தி சுரேஷ் தற்போது அட்லி இயக்கத்தில உருவான பேபிஜான் என்ற இந்தி படத்தில வருன் தவானுக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க.இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் அவரது பள்ளிக் கால நண்பரான ஆண்டனியை காதலித்து வந்த நிலையில இருவீட்டார் சம்மதத்தோட கடந்த 12ம் தேதி கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகிட்டாங்க. இந்த சூழல்ல புதுமணத் தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வந்துட்ருக்காங்க.அந்த வகையில தற்போது கீர்த்தி சுரேஷ் - ஆண்டனிக்கு நடிகர் சூரி வாழ்த்துகளை தெரிவிச்சிருக்காரு. அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில 'என் செல்ல தங்கை மற்றும் அன்பு மாப்பிள்ளை, உங்கள் மணவாழ்வு என்றும் மகிழ்ச்சியும் நேசமும் நிரம்பி, அழகான நினைவுகளால் நிறைந்ததாய் தொடரட்டும் “ என தெரிவிச்சிருக்காரு.இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற விடுதலை 2 படக்குழுகடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில விடுதலை 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படத்தின் முதல் பாகத்தை போல இந்த பாகத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைச்சிருந்தாரு. இந்த படத்தில விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பு கவர்ந்திருந்த நிலையில . இளையராஜாவின் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்குனே சொல்லலாம். இந்த நிலையில இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பட குழுவினர் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்காங்க. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.காசி விஸ்வநாதர் கோவிலில் சாய் பல்லவி சாமி தரிசனம் அமரன் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகை சாய்பல்லவி, நிதிஷ் திவாரி இயக்கத்தில நடித்துவரும் திரைப்படம் ராமாயணம்.ராமாயாணக் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக கன்னட நடிகர் யாஷ் நடிக்கிறாங்க. இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறாரு.மேலும் இந்த படத்தில அனுமனாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிச்சிருக்காங்க. ஆயிரம் கோடி பட்ஜெட்டில தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகள்ல உருவாகி வரும் ராமாயணம் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என படக்குழு அறிவிச்சிருந்தது.இந்த நிலையில நடிகை சாய் பல்லவி வாராணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்காங்க. இது குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகியிருக்கு.https://www.youtube.com/embed/VRPV4AAQfDQ2025-ல் பிசாசு 2 வெளியிட திட்டம்இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துச்சு. இந்த நிலையில நடிகை ஆண்ட்ரியாவை நாயகியாக வைத்து பூர்ணா, சந்தோஷ் பிரதாப், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில பிசாசு2 படத்தை இயக்கி வந்தாரு மிஷ்கின். ஆனா இரண்டு ஆண்டுகளாகியும் திரைப்படம் வெளியாகாம இருக்குது.இந்த நிலையில ஆண்ட்ரியா பிறந்த நாளை முன்னிட்டு பிசாசு 2 படத்தின் சிறப்பு போஸ்டர படக்குழு வெளியிட்ருக்கு. அதில படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிச்சிருக்கு.