லடாக் யூனியன் பிரதேசத்தில் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட இருவரை, விமானப்படை அதிகாரிகள் விமானம் மூலம் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இரவு நேரத்தில் திடீர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட 38 வயது பெண் மற்றும் 7 வயது சிறுமியை மீட்ட விமான படையினர், அவர்களை சண்டிகர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.