மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை, பொதுநல மனுக்களை விசாரிக்கும் அமர்வுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் மாற்றியுள்ளது. அரசியலமைப்பு பிரிவு 226 ன் படி ராகுலின் குடியுரிமை பற்றிய வழக்கை தொடர சுப்பிரமணியன் சுவாமிக்கு சட்டபூர்வ உரிமை இல்லை என தெரிவித்த நீதிமன்றம், அவரது மனுவை, பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான பொதுநல வழக்குகளுக்கான அமர்வுக்கு மாற்றியது. பிரிட்டிஷ் அரசிடம் தாக்கல் செய்த ஆவணங்களில் தாம் ஒரு பிரிட்டன் குடிமகன் என தெரிவித்து ராகுல் அரசியலமைப்பை மீறிவிட்டதாகவும் கூறி கடந்த 2019 ல் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.