news

இரண்டு நாள் பயணமாக இன்று போலந்து செல்லும் பிரதமர்.. போலந்து அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பேசுகிறார்

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று போலந்து செல்கிறார்.

Srini Vasan

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று போலந்து செல்கிறார். அங்கு போலந்து அதிபர் மற்றும் பிரதமரை சந்திக்கும் மோடி, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும் அங்கு வசிக்கும் இந்திய மக்களிடமும் அவர் உரையாற்றுகிறார். பின்னர் நாளை மறுநாள் போலந்தில் இருந்து ரயில் மூலமாக பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார்.