03 
news

ராணுவ வீரர்களுடன் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டை.. துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவை சிக்கின

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்களுடன் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மீட்கப்பட்டன.

Srini Vasan

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்களுடன் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மீட்கப்பட்டன.

மறைவிடம் ஒன்றில் 3 ஏகே ரக துப்பாக்கிகள், 11 ஏகே ரக தோட்டாக்கள், 11 கையேறி குண்டுகள் மீட்கப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள், தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.