வார வர்த்தகத்தின் முதல் நாளான திங்கள் கிழமை கடும் இறக்கத்துடன் துவங்கிய இந்திய பங்கு சந்தைகள் படு வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்துக் கொண்டன.
வர்த்தக துவக்கத்தில் 1000 புள்ளிகள் சரிந்து காணப்பட்ட மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் சரிந்து 84 ஆயிரத்து 299 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.
அதே போன்று தேசிய பங்குசந்தை குறியீடான நிப்டி 361 புள்ளிகள் சரிந்து 25 ஆயிரத்து 810 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது. பங்குசந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் சுமார் நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழந்தனர்.