வங்கதேசத்தில் பெண் உரிமை ஆர்வலர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டாக்காவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகிலுள்ள மாணிக் மியா அவென்யூவில் ஏராளமான பெண்ணுரிமை ஆர்வலர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மதத்தின் பெயரால் பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் இழிவான முயற்சிகளை கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர்.