வானில் தோன்றிய இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூனை லத்தின் அமெரிக்கா நாடுகளில் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். வழக்கமாக பௌர்ணமி தினத்தில் பிரகாசமாக தெரியும் நிலவு, அதன் சுற்றுப்பாதை பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது வழக்கத்தை விட பெரியதாகவும், கூடுதல் பிரகாசத்துடனும் தோன்றும் நிகழ்வு "சூப்பர்மூன்" என்றழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வை நேற்று நள்ளிரவு பிரேசிலின் Rio de Janeiro-வில் உள்ள Sugarloaf மலை மற்றும் Botafogo கடற்கரை பகுதியில் ஏராளமான மக்கள் கண்டுகளித்து, தங்கள் செல்போனில் படமெடுத்துக் கொண்டனர். இதேபோல் வெனிசுலா நாட்டின் தலைநகரான Caracas மற்றும் பொலிவியாவின் El Alto நகரத்திலும் வானை பிரகாசமாக்கிய இந்த சூப்பர் மூனை பலர் கண்டு ரசித்தனர்.