உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு, மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதியளித்தார். கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த விசாரணையின் போது பேசிய தலைமை நீதிபதி, மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினர்.