நீச்சல் உடையில் குளிக்க ஆசைப்பட்ட மனைவிக்கு 418 கோடி ரூபாய்க்கு கணவர் தனித்தீவையே விலைக்கு வாங்கிய சம்பவம் அனைவரையும் வாயை அடைத்து போக செய்தது.
துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஜமால் அல்நடக். கோடீஸ்வரரான இவரது மனைவி சவுதி அல்நடக். இங்கிலாந்தில் பிறந்த சவுதி அல்நடக் துபாயில் படித்துக்கொண்டிருந்த போது ஜமால் அல்நடக்கை சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது
மனைவி மீது அதிக பாசம் கொண்ட ஜமால் அல்நடக் அவருக்கு Surprise கொடுப்பதற்காக ஏராளமான பரிசு பொருட்களை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் சவுதி அல்நடக் பிகினி உடையில் அதாவது நீச்சல் உடையில் குளிப்பதற்காக ஆசைப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர்மீது அளவு கடந்த பாசம் கொண்ட ஜமால் அல்நடக் அவருக்காக தனித் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சவுதி அல்நடக், தனக்காக தனது கணவர் ஜமால் அல்நடக் தீவை வாங்குவதற்காக 50 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 418 கோடி) செலவு செய்து விட்டதாக கூறியுள்ளார். எனது கணவர் வாங்கிய தீவு ஆசியாவில் உள்ளது. நாங்கள் தீவின் சரியான இடத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றார்.
இதனையடுத்து சவுதி அல்நடக், அந்த தனியார் தீவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஏராளமான பார்வையாளர்களை குவித்து வருகிறது.
என்ன தான் மனைவி மீது அதிக காதல் கொண்டு 418 கோடி செலவு செய்து தனித்தீவை வாங்கிய ஜமால் அல்நடக்கை நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகின்றனர்.