மதுவினால் இளம்வயதில் அதிக பெண்கள் கணவனை இழப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு மதுவை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார்.
புதுக்கோட்டையில், தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட மது ஒழிப்பு பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு உரிமைத் தொகை என்ற ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு ஆண்களிடம் இருந்து டாஸ்மாக் மூலமாக 5 ஆயிரம் ரூபாயை வசூலித்துவிடுவதாக கூறினார்.