தாய்லாந்தில் இருந்து சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தி வந்த சென்னை மற்றும் கோவையை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேரை கோழிக்கோடு விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.
ஏர் ஏசியா விமானத்தில் வந்த இவர்கள் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சென்னையை சேர்ந்த ராபியத், கோவையை சேர்ந்த கவிதா ராஜேஷ் குமார் மற்றும் திருச்சூரை சேர்ந்த சிமி ஆகிய மூன்று பேரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 34 கிலோ ஹைபிரிட் கஞ்சா மற்றும் சாக்லேட்டுகளில் மறைத்து கொண்டுவரப்பட்ட 15 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களை கைது செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், இது சர்வதேச போதை கடத்தல் கும்பலின் வேலையா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.