ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேடுதல் வேட்டை நடத்திய பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனால் பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.