Sivagangai 
news

சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக திருவிழா... தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Web Team

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், தேரோட்டம் முடிந்த பின் பக்தர்கள் ஏராளமான தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அப்போது பொதுமக்கள் பலர் தலைக்கவசம் அணிந்து சென்று, சிதறிய தேங்காய்களை அள்ளி சென்றனர்.