vijay 
news

டிச.5ல் புதுச்சேரிக்கு செல்லும் த.வெ.க. தலைவர் விஜய்

கட்சி தொடங்கிய பிறகு முதல்முறையாக புதுச்சேரி பயணம்

Web Team

கட்சி தொடங்கிய பிறகு, முதன்முறையாக வரும் 5ஆம் தேதி புதுச்சேரிக்கு செல்லவுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோடு ஷோ செல்ல திட்டமிட்டு, காலாப்பட்டு, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம் வழியாக சென்று உப்பளம் சோனாம்பாளையம் பகுதியில் மக்கள் முன் உரையாற்ற அனுமதி கோரி, காவல்துறையிடம் அக்கட்சியினர் கடிதம் வழங்கியுள்ளனர். தவெகவினர் அளித்த கடிதத்திற்கு காவல்துறை தரப்பில் இதுவரை பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.