அரசியல் என்றாலே சர்ச்சைகள்தான் எனவும், அந்த சர்ச்சைகள் சவால்களை முறியடித்தால் தான் வெற்றி பெற முடியும் என விஜய் கட்சி கொடி விமர்சனம் தொடர்பான கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்த 72வது பிறந்த நாளை முன்னிட்டு 71 டாட்டு கலைஞர்களால் 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்தின் முகம் டாட்டுவாக போடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், விஜய் சினிமா போன்று அரசியலை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.