news

ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்

பாரா ஆசிய விளையாட்டில் ஒரே நாளில் 3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை துளசிமதிக்கு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Azhagiri Arumugam

ஒரே நாளில்...

இதுதொடர்பாக, முதல்வர் விஜய் கூறி இருப்பதாவது;

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய அணிகளுக்கும், அந்த அணிகளில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்.

முதல்வர் விஜய்

ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை

வீராங்கனை துளசிமதி முருகேசன் சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர், இதுவரை மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவரது தொடர் வெற்றி, சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. அவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும்.

இவ்வாறு முதல்வர் விஜய் கூறி உள்ளார்.

விளையாட்டு

இந்தியா 114 பதக்கங்கள் வென்று சாதனை

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. போட்டியின் நிறைவு நாளில் பதக்க வேட்டையைத் தொடர்ந்த இந்திய வீரர்கள், மொத்தம் 114 பதக்கங்களை கைப்பற்றினர். இதில் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். கடந்த 2023ஆம் ஆண்டு வென்ற 108 பதக்கங்கள் என்ற சாதனையையும் இந்தியா முறியடித்து உள்ளது.