சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும்29 மற்றும் 30ஆம் தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தென்காசி மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அதன் படி 29 ஆம் தேதி காலை 9.30 மணி, பிற்பகல் 3.30 மணி என இருநேரங்களில் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.